நாட்டில் இம்மாத பணவீக்க புள்ளிவிபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இம்மாத பணவீக்க புள்ளிவிபரம் வெளியானது!


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் நவம்பரில் 61.0% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த அக்டோபரில் 66 % ஆக பதிவாகியிருந்த நிலையில், நவம்பரில் அது 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.


குறித்த அறிக்கையின்படி, அக்டோபரில் 85.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் அக்டோபரில் 243.8 ஆக இருந்த நுகர்வோர் விலை சுட்டெண் நவம்பரில் 242.6 ஆகக் குறைந்துள்ளது.


அத்துடன், அக்டோபரில் 85.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அவ்வாறே, கடந்த மாதம் 56.3 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், 54.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.