
குரூப் F மொராக்கோ அணிக்கும் குரோஷியா அணிக்கும் இடையில் முதலாவது போட்டி நடைபெறவுள்ளதுடன், அந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது போட்டி E குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேர்மனி அணிக்கும் ஜப்பானிய அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளதுடன் போட்டி இலங்கை நேரப்படி மாலை 06.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்றாவது போட்டி ஸ்பெயின் மற்றும் கொஸ்டாரிக்கா அணிகளுக்கு இடையில், குழு E ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அது இலங்கை நேரப்படி இரவு 09:30 மணிக்கு நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது போட்டியானது குரூப் F ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பெல்ஜியம் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாகவும், அது இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(யாழ் நியூஸ்)