சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா லெஜன்ட்ஸ் அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா லெஜன்ட்ஸ் அணி!

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இதன் இறுதிப்போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சச்சின் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 4 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.

அதன் பின் நமன் ஓஜாவுடன் வினய் குமார் களம் இரங்கினார். அதிரடியாக ஆடிய வினய் குமார் 36 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நமன் ஓஜா அதிரடியாக ஆடினார். அவர் 71 பந்துகளில் 108 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இறுதியில் இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியை திணறடித்தனர். இறுதியி அந்த அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இறுதியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக நமன் ஓஜா தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரின் தொடர் நாயகனாக இலங்கை அணி வீரர் தில்சன் தேர்வு செய்யப்பட்டார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.