அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வழிபாட்டு தளங்களை புனித நிறுவனங்களுக்கான குழுவில் இருந்து நீக்கி பொது பணியின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 65 ரூபாவாக உள்ள மின்சார அலகு ஒன்றுக்கான கட்டணம் 32 ரூபாவாக குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மத ஸ்தலங்களில் ஏற்பட்டுள்ள மின்சார கட்டண பிரச்சினைக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அவர் விபரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.