இரு குற்றச்சாட்டுக்களிலிருந்து ரிசாட் பதியுதீனுக்கு விடுதலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு குற்றச்சாட்டுக்களிலிருந்து ரிசாட் பதியுதீனுக்கு விடுதலை!!

பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச்சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.