
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதற்கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளார்.
இதன் மூலம் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய அதிகரிக்கப்பட்ட கோட்டாவுக்கான QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் நவம்பர் 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.
மற்ற மாகாணங்களுக்கான செயல்முறை கட்டங்களில் பின்பற்றப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)