தம்பதியினரால் நரபலி என கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்பதியினரால் நரபலி என கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்!


கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார்.


இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா-பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர்.


இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால், கொச்சி காவல்துறையில் செப்டம்பர் 27ஆம் திகதி புகார் அளித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த போலீசார் கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


காவல்துறையின் விசாரணையில், திருவலா பகுதி தம்பதியால் பத்மாவும், நோஸ்லின் என்ற பெண்ணும் கொடூரமான முறையில் உடல் பாகங்கள் சேதப்படுத்தப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்டது கொடூர சம்பவம் தெரிய வந்தது.


இதுகுறித்து கொச்சி காவல் ஆணையர் கூறுகையில், கொல்லப்பட்ட இரு பெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


-இந்திய ஊடகம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.