டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" கவிதை நூல் இன்று வெளியீட்டு வைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" கவிதை நூல் இன்று வெளியீட்டு வைப்பு

ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.00 மணியளவில் ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

ஆசிரியை என்.எம்.ஆரிபாவின்  தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிகாரா மவ்ஜூத்(SLAS),
ஏறாவூர் நகர சபை நகர முதல்வர் எம்.எஸ்.நழீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

ஏறாவூர் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமத் அப்கர் (SLAS), ஏறாவூர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.ஹன்சுல் சிஹானா (SLPS),
ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் நஸீரா எஸ். ஆப்தீன், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் றிப்கா அன்சார், சம்மாந்துறை க/மு அஷ்ரப் வித்தியாலயத்தின் ஆசிரியை மஷூரா சுஹுறுத்தீன், Jp, dip.in psychology எஸ். யூ. கமர்ஜான் பீவி, பிரான்ஸ் Fact.Fr தமிழர் கலைக் கலாசார பண்பாட்டுப் பேரவையின் தலைவரும், இதழாசிரியர், பதிப்பாளர், தமிழ் நெஞ்சம் நிறுவனருமான அமின், இந்திய தமிழ்நாடு உத்தமபாளையம் சார்நிலைக் கருவூலம் 
கம்பம் தேனி எம். ஷர்ஜிலா பர்வீன் யாக்கூப், ஏறாவூர் நகர் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ், ஏறாவூர் நகர் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம் ரிஸ்வான், ஏறாவூர் நகர் கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம் நியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் 

ஏறாவூர் எஸ்.எச்.அஹமட் லெப்பை, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர், மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் ஆசிரியை பரீனா நஸீர், கோரளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில், கிளிநொச்சி மாவட்ட வன இலாகா அதிகாரி எம்.ஏ.லியா உல் ஹக்கீம், மட்டக்களப்பு மத்தி ஆசிரிய ஆலோசகர் எச்.எம்.ஏ. மாஜித், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் எச்.எம்.ஏ. மௌஜூத், மட்/மம/ மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் ஆசிரியைகளான எச். எம்.பாத்திமா நுஸ்ரத், பாத்திமா நுஸ்ரா 
ஹில்மி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் எச்.எம்.ஏ. ஹில்மி, கடற்றுறைப் பொறியியலாளர் எச்.எம். ஆஷிக் முஹமட், மட்/ மம /அலிகார் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.பி.எம்.சப்ராஸ் ஏறாவூர் தபால் அதிபர் எஸ்.எச். ஹஸ்ஸாலி, மட்டக்களப்பு தபால் அதிபர் எம்.எம். சக்கூர், மட்/மம/அல் முனீரா பாலிகா மகா வித்தியாலய ஆசிரியை றிஹானா பானு விஷேட அதிதிகளாகவும்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ்.எம். அலியார், எம் எஸ் கமர்தீன், எம்.எம்.அப்துல் காதர், ஓய்வு பெற்ற அதிபர்களான எம்.எஸ். அபுல் ஹசன், பி.ஏ.காதர்,  மட்/மம/ மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹைதீன், மட்டக்களப்பு மத்தி ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சபூர், மட்/ மம/ மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.ஐ.ஏ.றசாக், ஆசிரியர் எம்.எல்.ஏ. சத்தார், ஓய்வு பெற்ற ஆசிரியைகளான திருமதி என்.டி.எம்.ஹுஸைன்,  திருமதி ஏ.யு. மஹ்மூது லெப்பை, திருமதி எஸ்.யு.எம்.அலிவா, திருமதி பீ. இஸட்.எம். ஜஃபர்,  ஏ. பாத்தும்மா பீவி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில், தமிழ்த் தாய் மொழி வாழ்த்தை எம்.ஸைனப் பனீக்கா எச். ஸீனத் நமாவும் வரவேற்புரையை ஏரூர் ஜிப்ரியாவும், தலைமை உரையை என்.எம். ஆரிபாவும் நிகழ்த்துகின்றனர்.

நூல் நயந்துரையை கவிக்கோ ஏ.சி. அப்துல் ரகுமான் செய்கிறார்.

எம்.ஐ.றிஸ்வி மற்றும் எம்.ஐ. இஸ்ஸத், எம். ஐ. றிஸ்வி ஆகியோர் நிகழ்வில் பாடல் பாடுவதோடு, எம்.பாத்திமா மஹ்தியா கவிதை மழை பொழிகின்றார்.

நஸீரா எஸ். ஆப்தீன், ஆசிரியர் அபுல்ஹசன்,  எஸ்.யு.கமர்ஜான் பீவி ஆகியோர் நிகழ்வில் விசேட உரையாற்றுவதோடு,  ரசனைக் குறிப்பை ஆசிரியை மஷூறா சுஹுர்தீனும்  நன்றியுரையை  எம்.எஸ்.எம்.நஸீர் ஆகியோரும்  நிகழ்த்துகின்றனர்.

நிகழ்ச்சித் தொகுப்பை எம். ஐ. இஸ்ஸத் செய்கின்றார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.