
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட மேலும் இருவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - கிங்ஸ்பெரி உணவகத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் மனைவி மற்றும் அவருடன் தொடர்புடைய மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் இன்றைய தினம் ஸ்கைப் தொலைக் காணொளி வாயிலாக கோட்டை பதில் நீதவான் சிலனி பெரேராவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் சிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.