இலங்கையின் மத்திய வங்கி ரஷ்யாவின் தேசிய அட்டை கொடுப்பனவு முறைமை (NSPK) வழங்கிய MIR அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை இடைநிறுத்தியுள்ளது.
“இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கியானது தற்போதைய நிலையில், MIR அட்டை திட்டத்தை செயற்படுத்துவதற்கான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும் நிலையில் இல்லை" என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா இன்க் (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு இன்க் (MasterCard) ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை இடைநிறுத்திய பின்னர், ரஷ்யாவில் வழங்கப்பட்ட அமெரிக்க அட்டைகள்( Visa, MasterCard) வெளிநாட்டில் வேலை செய்வதை நிறுத்திய பிறகு, இந்த ஆண்டு ரஷ்யர்களுக்கான MIR கார்டுகளின் முக்கியத்துவம் கணிசமாக உயர்ந்தது. (யாழ் நியூஸ்)