உலக சந்தையில் இன்றைய தினம் (05) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபா 625,544.00 ஆக காணப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 22,070.00 ஆகவும், 24 கரட் தங்கம் 8 கிராமின் விலை 176,550.00 ஆகவும், 22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 20,240.00 ஆகவும், 22 கரட் தங்கம் 8 கிராமின் விலை 161,850.00 ஆகவும் நிலவியது.
அதேநேரம், 21 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 19,320.00 ஆகவும், 21 கரட் தங்கம் 8 கிராமின் விலை 154,500.00 ஆக நிலவியது.