2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக பெறுமதிமிக்க இன்னிங்ஸை ஆடிய பதும் நிஸ்ஸங்க 74 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக கார்த்திக் மெய்யப்பன் மூன்று விக்கெட்டுக்களைப் பதிவு செய்ததுடன், பானுக ராஜபக்ஷ, சரித் சசங்க மற்றும் தசுன் ஷனக ஆகியோர் 3 விக்கெட்டுகளாக (ஹாட்ரிக்) ஆட்டமிழந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 17 ஓவர்களில் 73 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
பந்துவீச்சில் துஷ்மந்த சமிர 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன 1 விக்கெட்டையும், பிரமோத் மதுஷான், தசுன் ஷனக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஸ்கோர்கார்ட் கீழே, (யாழ் நியூஸ்)