
நேற்று (12) மாலை மொரட்டுவை எகொட உயன பிரதேசத்தில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்காக குறித்த இளைஞர் தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இரண்டு மொபைல் சிம்களை கொள்வனவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கைத்தொலைபேசிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். (யாழ் நியூஸ்)