
பொலன்னறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“சில வாரங்களுக்கு முன்புதான் புலனாய்வுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டங்கள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தினார். உளவுத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருநூறாயிரத்திற்கும் குறைவாகவே காணப்பட்டது. இவர்களுக்கு பயந்து ஒரு அடி பின்வாங்கினோம். பயந்தவர்கள் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தனர். பாராளுமன்றத்தில் சுயாதீனமாகியமை பயம் அல்ல, சதி.” (யாழ் நியூஸ்)