
சிவில் மற்றும் சமூக அரசியல் உரிமைகள், சமூக பொருளாதார உரிமைகளை மையமாகக்கொண்டு இவை மனித உரிமைகளில் அடங்குகின்றன ஐ. நா. செயலாளர் நிராகரித்தார்.
இதனையடுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது உள்நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இலங்கை சார்பான அறிக்கையின் குறிப்பிட்டுகறது .
மனித உரிமைகள் பேரவையானது இலங்கையின் பயணத்தை சுதந்திரமாக முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை ஐ. நாக தனது நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி சப்ரி மேலும் கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிய நிபுணத்துவமமும் மனித உரிமைகள் பேரவைக்கு உள்ளது. இருந்தாலும் அது குறித்து தற்போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் வரைவில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கப்பட்டுள்ள 19 விடயங்களில் 9 விடயங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மை நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளன .
உணவு பாதுகாப்பின்மை, கடந்த காலங்களில் நிலவிய பாரிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை மற்றும் மக்களின் வருமானம் குறைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்ட தவரான பொருளாதார தீர்வுகளின் காரணமாக நிலவும் பொருளாதார மந்த நிலையினால் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை கைது செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறையின் போது உயிரிழப்புகள், காயங்கள், சொத்துகள் அழிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மனித உரிமைகள் சம்பந்தமாக முனைப்புடன் செயல்படும் சமூக ஆர்வலர்கள், சமூக சிவில் செயற்பட்டார்கள் வேட்டையாடப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும், இவை சம்மந்தமாக உடனடி விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை உடனடியாக விசாரித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது தேவையான சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய குழு மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரைக்கிறது.
( யாழ் நியூஸிற்காக பேருவளை ஹில்மி )