
நாட்டில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கப்பற்றாக்குறையே இதற்கான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் டபிள்யு. எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதிகரித்த கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இதன்காரணமாக நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் 100க்கு 3 வீத ஒதுக்கம் போதுமானதாக இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.