
இதன்படி, எதிர்காலத்தில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபா மீளச் செலுத்தப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
உலக வங்கியிடமிருந்து உதவித் தொகையாகப் பெறப்பட்ட 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தோராயமாக 26 பில்லியன் இலங்கை ரூபாவாகும் எனவும், அதற்கான தொகையை டிசம்பர் மாத இறுதிக்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)