
சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், Beijing நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும்
சில சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஷி ஜின் பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி Beijing திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் இவ்வாறான செய்திகள்களையும் வீடியோக்களையும் சீன மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை புறப்பட்ட இடத்திற்கு வேண்டும் தரையிறக்கப்பட்டதாகவும் சீன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான electric speed Train service இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
News Highland vision வெளியிட்டுள்ள தகவல் படி, முன்னாள் சீன அதிபர் Husindavo மற்றும் முன்னாள் பிரதமர் ven jibavo ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி, பாரிய இராணுவ வாகனங்கள் Beijing நோக்கி அணிவகுத்துச் சென்றதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் Jennifer jeng சீன ராணூவம் Beijing நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சீனா இராணுவ வாகனங்கள் Beijing நோக்கி நகர்கின்றன என்றும் , இதற்கிடையில், ஷீ ஜின் பிங்கை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சில செய்திகள் வெளிவந்துள்ளன.
உண்மையை அறிந்துகொள்ள சில சீன வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்ட போது, சில சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் Beijing தவிர ஏனைய இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் மாகாணளுக்கு இடையிலான போக்குவருத்துக்கள் இதடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் , ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பரவி வரும் இவ்வாறான செய்திகளை சீனா உத்தியோகபூர்வமாக மறுத்து அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் சீனா அரசியல் நிலைமைகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகின்றது என்றும், நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் நிலைமை வெகு சீக்கிரத்தில் சீராகி விடும் எனவும், சீன அரசியல் மாற்றங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்புகள் ஏற்பட போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
-பேருவளை ஹில்மி