இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல! -விவசாய அமைச்சர்
advertise here on top
advertise here on top

இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல! -விவசாய அமைச்சர்


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தாம் கருதுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத இரசாயனங்கள் மற்றும் தரக்குறைவான உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


எனவே, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது எனவே கால்நடை தீவன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய வர்த்தமானி அறிவித்தலை நீக்கினால் அந்த அளவு அரிசியை கால்நடை பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்றார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு இந்நாட்டு விவசாயிகள் பலமடைந்துள்ளனர்.


கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.