இத்தொழிலுக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் முட்டைத் தொழிலை பராமரிக்க இயலாது என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு சுமார் 48 ரூபாவாக உள்ளதாகவும், அப்போதும் முட்டையை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு முட்டையை 48 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டுமாயின் ஒரு முட்டை 36 ரூபாவிற்கு நாம் கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், பண்ணையிலேயே ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 48 ரூபாய் என்றார்.
இந்நிலையால் சில பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளைக் கூட இறைச்சிக்காக விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முட்டை தொழில் நலிவடைந்துள்ளதால், சந்தைக்கு வரத்து குறைந்து, முட்டை விலை நிச்சயம் உயரும் என்றார். (யாழ் நியூஸ்)