பாண் ஒன்றின் விலை ரூ. 500 - இதற்கு தீர்வு இல்லையா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாண் ஒன்றின் விலை ரூ. 500 - இதற்கு தீர்வு இல்லையா?

கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவு, மற்றும் பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு, காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையான மக்கள் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் நேற்று (27) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை ஆற்றிய திரு.பாசிர் மொஹமட் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை இழந்துள்ளனர்.

பேக்கரி தொழிலில் ஏராளமானோர் வேலை பார்த்தனர்.வேலையும் பறிபோயுள்ளது. பாண், பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், அதனை கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இல்லை.

தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்றின் விலை ரூ.  500 வரை உயரும். ஏழைகளின் உணவாக இருந்த பாண், தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது.

பல ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறேன். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளேன்.

என் பேக்கரியில் வேலை செய்தவர்களுக்கு என்ன நடக்கும்? தீர்வு இல்லையா? அவர் மேலும் கேள்வி எழுப்பினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.