திங்கட்கிழமை (26) இரவு 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)