துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பாபர் அசாம் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 29 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், மொஹம்மட் நவாஸ் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 18 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு 4 ஓட்டம் மற்றும் இரண்டு 6 ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், மொஹம்மட் ரிஸ்வான் 14 ஓட்டங்களையும், பகார் ஜமான் 13 ஓட்டங்களையும்,இப்திகார் அஹமட் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேலும், குஷ்தில் ஷா 4 ஓட்டங்களுடனும், அசிப் அலி மற்றும் ஹசன் அலி ஆகியோர் ஓட்டங்கள் எதனையும் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் மொஹம்மட் ரிஸ்வான் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் நல்ல ஆரம்பத்தை பெறுக்கொடுத்தாலும், அடுத்து வந்த வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியிருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இவர் தனது மூன்றாவது ஓவரின் இறுதி 2 பந்துகளில் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அத்துடன், மஹீஸ் தீக்ஷன 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தனஞ்சய டி சில்வா 4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
சாமிக்க கருணாரத்ன 01 ஓவர் பந்துவீசி 04 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.
ப்ரமோத் மதுஸங்க 2.1 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தில்ஷான் மதுஷங்க 4 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களை வழங்கி விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.
இந்த இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 17 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 48 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், பானுக ராஜபக்ஷ 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 19 பந்துகளில் 02 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மேலும், தசுன் சானக்க 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
தனஞ்சய டி சில்வா 09 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கிடையில், குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
உஸ்மான் கதிர் 4 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
மொஹம்மட் ஹஸ்னைன் 03 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகியுள்ளன.
இறுதிப்போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான ஒத்திகை போட்டியின் சாயலில் இன்றைய சுப்பர் - 4 போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.