
SLASSCOM (ZCC) Zahira College Coding Club, அவுஸ்திரேலிய Coding Club உடன் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கான IT துறையின் மேம்பாட்டுக்கான திட்டத்தின் கீழ், சிறந்த மொபைல் App க்களையும் கார்டூன்களையும் ஆக்கங்களையும் சிறந்த முறையில் வெற்றிகரமாக தயாரித்த மாணவர்களுக்கு, 23.08.2022 அன்று கல்லூரி மண்டபத்தில் பரிசில்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
மாணவர்களிடத்தில் கணணி துறையில் மேம்பாட்டையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், 2019 ஆம் ஆண்டு ZCC (Zahira College Coding Club) எனும் பெயரில் பதிவு செய்து ஆரம்பிக்கப்பட்டது.
இத்துறையில் சிறு வயதுடைய மாணவர்கள்
மொபைல் App கலையும் கார்ட்டூன்களையும் வெற்றிகரமாகவும் சிறந்த முறையிலும் தயாரித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
மேலும் மாணவர்களால் செய்யப்பட்ட மொபைல் Appகளும் கார்டூன்களும் அதே மாணவர்களால் இந் நிகழ்சியில் செயற்படுத்தி காட்டப்பட்டது.
ஸாஹிரா கல்லூரியின் 7 ஆம் ஆண்டு மாணவர் யூசுப் ஜஸ்னி அவர்களால் Medilab என்ற பெயரில் வெற்றிகரமாக
தயாரிக்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டு, App Store இணையத்தில் ஸாஹிரா கல்லூரியியின் முதல் மாணவரின் ஆக்கமாக 2020 ஆண்டு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பாக இம் மாணவர் விசேட பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவ்வைபவத்தில் கல்லூரியின் அதிபர், ஆசியர்கள் உட்பட கல்லூரியின் ஆளுனர் சபையின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களை கணணி துறையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் அஷ்ரப் அவர்கள் பாடசாலை அதிபர், ஆளுனர் சபை அங்கத்தவர்களினாலும் கெளரவிக்கப்பட்டார்.
உலகத்தில் வேகமாக முன்னேறி வரும் கணணி யுகத்தில், மாணவர்களை சிறு வயது முதல் இதற்கான வழி காட்டுதலாக ஆரம்பிக்கபட்டுள்ள இத்திட்டம் ஏனைய பாடசாலைகளுக்கும் சிறந்த ஒரு முன் உதாரணமாகும்.
தகவல்: பேருவளை ஹில்மி