
ஜனாதிபதியின் பாதுகாப்பு விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் எச்.எம்.எம் ஹாரிஸ் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது 6 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டார்.
எனவே, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் குறித்து வலியுறுத்திய நிலையில், அது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி, சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த 6 தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.