
நடந்து முடிந்த 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையில் தனது காலினால் பரீட்சை எழுதி வர்த்தகப்பிரிவில் 3A சித்திகளை ரஷ்மினி இமேஷா குணவர்தன எனும் மாணவி பெற்றுள்ளார்.
இவர் எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வரும் விசேட தேவைகள் உடைய மாணவி ஆவார்.
மேலும் இவர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)