மலேஷியா வேலை விசா மோசடி தொடர்பில் சிஐடி விசாரணை!!
advertise here on top
advertise here on top

மலேஷியா வேலை விசா மோசடி தொடர்பில் சிஐடி விசாரணை!!


சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டு வேலை விசா தருவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி பணத்தை ஏமாற்றி மக்களை ஏமாற்றி வரும் கடத்தல்காரர்களை கைது செய்ய இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


சுற்றுலா விசாவில் மலேசியா சென்றதன் பின்னர் அந்த நாட்டில் உள்ள சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இதன்படி, ஆட்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் எனவும், அதற்கான முயற்சிகளை தவிர்க்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளவும், அவ்வாறான மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 119, 118 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் இலங்கை பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.