
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மட்டுமன்றி, பெட்ரோலிய கூட்டுத்தாபன முதலாளிகளும் பொலிஸாரும் எரிபொருளைத் திருடி விற்பதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டுகிறார்.
முச்சக்கர வண்டி சாரதிகளை குற்றவாளிகளாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரந்தோறும் ஐந்து லீற்றர் எரிபொருள் தமது தொழிலுக்குப் போதாது என்றும் சமூக ஊடகங்களில் கபடவாதிகள் போதும் என கூறுவதாகவும் அவர் கூறினார்.
இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)