
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாத்தா, தனது பேத்தியின் மரணம் குறித்து கண்ணீர் ததும்பக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மிடில் ஈஸ்ட் ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், அச்சிறுமியை அடக்கம் செய்ய அவளை ஒரு வெள்ளைத்துணியில் சுற்றியிருந்தனர். அப்போது அந்த சிறுமியின் தாத்தா, “அவள் நர்சரிக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்டாள். அவளுக்கு ஒரு பை மற்றும் துணி வேண்டும். இந்த அப்பாவிப் சிறுமி என்ன செய்தாள்? அவள் என்ன ராக்கெட்டுகளின் பொறுப்பாளராக இருந்தாளா? அல்லது சண்டையிட்டாளா?” என கண்ணீருடன் கேட்டார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல், `போராளிகளை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது' என தெரிவித்திருக்கிறது.