காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களுக்காக இலவசமாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தற்போது பணம் அறவிடுவதாக தகவல்!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களுக்காக இலவசமாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தற்போது பணம் அறவிடுவதாக தகவல்!

காலி முகத்திடல் ஆர்பாட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆர்பாட்டக்காரர்களுக்காக ஆரம்பத்தில் இலவசமாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தற்போது பணம் அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பணம் வசூலிக்காமல் ஏராளமான வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் ஆஜராகினர், ஆனால் தற்போது அவர்கள் இலவச பிரதிநிதித்துவத்தை கைவிட்டனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதில் வழமை போன்று சட்டத்தரணிகள் தமது கட்டணத்தை அறவிடுகின்றனர். 

இதனால் சில ஆர்பாட்டக்காரர்கள் நிதி சிக்கலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடத்தை குறித்தும் சங்கத்தின் சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மைய நாட்களில் சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தொழில் நெறிமுறைகளை மீறியுள்ளதாக சங்கத்தின் செயலாளருக்கு குழுவொன்று அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.