
தற்போதுள்ள பிரச்சினைக்கு சர்வகட்சி அரசாங்கத்தை தீர்வாக பார்க்கவில்லை என திரு.பொன்சேகா தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களின் பிரதான கோரிக்கையாக ஊழலை ஒழிப்பதாக தெரிவித்த திரு.பொன்சேகா, அதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியமானது எனவும் திரு.பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)