
முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் திரு.சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாயும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாயும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)