ஒலுவில் துறைமுக பணிகளை துரிதப்படுத்த அக்கரைப்பற்று முதல்வரினால் இயந்திரங்கள் கையளிப்பு!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஒலுவில் துறைமுக பணிகளை துரிதப்படுத்த அக்கரைப்பற்று முதல்வரினால் இயந்திரங்கள் கையளிப்பு!


ஒலுவில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாயிலுள்ள மண்ணை சமநிலைபடுத்துவதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் Excavator மற்றும் தெப்பம் போன்ற இயந்திரங்களை இன்று  (16) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி  கையளித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ஒலுவில் மீனவர் துறைமுக வாயில் மண்ணை சமநிலைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அம்பாரை மாவட்ட மீனவர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகளை ஏற்று, அப்பணிகளை மேலும் துரிதப்படுத்த அக்கரைப்பற்று மாநகர சபை இவ்வுதவியினைச் செய்வது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்கருதி இப்பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க உதவிக்கரம் நீட்டிய அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், அதன்  முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகிக்கும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். 

இதன் போது அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாஸ் உட்பட மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உத்தியோகித்தர்களும் கலந்து கொண்டனர். (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.