ஐக்கிய மக்கள் சக்தி கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கயான் டி மெல் பிலியந்தலை பொலிஸாரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது அமைதியின்மையின் போது பதிவாகிய ஆறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இன்று பிலியந்தலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)