சர்ச்சைக்குறிய சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குறிய சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!


இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின் பேரில் இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனக் கப்பலின் வருகையை எதிர்வரும் 10ஆம் திகதி ஒத்திவைக்குமாறு சீன அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.