
நள்ளிரவிலிருந்து (05) பெட்ரோல் விலை 51.7 வீதமும் டீசல் விலை 42.5 வீதமும் உயர்த்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விலையேற்றத்திற்கு முன்பே எரிபொருளை நிரப்பிக்கொள்ளப் பலர் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்தனர்.
சில நிலையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
விலையேற்றம், நாட்டில் வறுமையில் வாடும் மில்லியன் கணக்கானோரைத்தான் அதிகமாகப் பாதிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
உலகச் சந்தையின் நிலவரத்தைக் கருத்தில்கொண்டு எரிபொருளின் விலையை ஏற்ற முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் நஸ்ரு ஹமிட் தெரிவித்தார்.
ரஷ்ய - உக்ரேன் போரால் உலக அளவில் அதிகரித்துள்ள எரிசக்தி விலைகள் பங்களாதேஷை அதிகம் பாதித்துள்ளது.
அங்கு மின்சார நிலையங்களுக்குப் போதுமான எரிபொருள் இல்லாததால் தினமும் 13 மணி நேரம் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. (யாழ் நியூஸ்)