இலஞ்ச ஊழல் குற்றம்சாட்டப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அமைச்சர் பதவி!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

இலஞ்ச ஊழல் குற்றம்சாட்டப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அமைச்சர் பதவி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்ததையடுத்து அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜப்பானிய Taisei நிறுவனத்திடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியுள்ளதாக அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

ஜப்பானின் Taisei நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரியதாக சமூக, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை எழுப்பினார்.

நிமல் சிறிபால டி சில்வாவின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், இந்த விவகாரம் தமக்கு உட்பட்ட அமைச்சின் கீழ் வருவதனால் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கோரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக ராஜினாமா செய்துள்ளார்.

அதன் பின்னர், ஜூலை 22ஆம் திகதி, முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விசாரணைக் குழு அறிக்கை ஜூலை 31ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளித்தது. அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றமற்றவர் என குழு உறுப்பினர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.