
வாட்ஸாப் பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸாப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
வாட்ஸாப் நிறுவனம் 'Delete For Everyone' என்ற ஆப்சனை கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்ஸாப்பில் செய்தியை நீக்கியதும், அந்த மெசேஜ்கள் அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவரின் சாட்டில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
இந்நிலையில், இந்த ஆப்சனில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸாப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
அதாவது இதுவரை Delete For Everyone மூலம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அனுப்பிய மெசேஜ்களை நீக்க முடிந்தது. இனிமேல் இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை Delete For Everyone ஆப்சன் மூலம் மெசேஜ்களை நீக்கும் வசதியை வாட்ஸாப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இந்த வசதியை ஆன்ட்ராய்ட் மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்களும் உங்களது வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் வந்துள்ளதா? என்பதை இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தியை நீக்க முயற்சி செய்து, இந்த அம்சம் உங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைப் தெரிந்துகொள்ளலாம்.
அவ்வாறு இல்லை என்றால் இன்னும் சில நாட்களில் உங்களது மொபைலில் இந்த ஆப்சன் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)