கடவுச் சீட்டு பெறுபவர்களுக்கு ஓர் நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச் சீட்டு பெறுபவர்களுக்கு ஓர் நற்செய்தி!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதிக தேவை காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கவுன்டர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.