தாய்லாந்து குண்டுவெடிப்பு - கோட்டாபய நாடு திரும்புவதாக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாய்லாந்து குண்டுவெடிப்பு - கோட்டாபய நாடு திரும்புவதாக அறிவிப்பு!

தெற்கு தாய்லாந்தில் இன்று 7 பேர் காயமடைந்த பல குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இராஜினாமா செய்யுமாறு கோரி பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்திற்கு வந்தார்.

மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற அவர், சிங்கப்பூர் சென்று, ஒரு வாரத்திற்கு முன்பு விசிட் விசாவில் தாய்லாந்தின் பாங்காக் வந்தடைந்தார்.

பாங்காக் வந்தடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்சவை அவரது தங்குமிடத்திலேயே இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.