ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான கடிதத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உட்பட்டு தான் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில், “ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு வரலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)