மின்சாரக் கட்டணம் அதிகரிப்பால் ஒரு கிலோ அரிசியின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 1.50 ரூபா மின்சாரம் செலவாகியிருந்த நிலையில், புதிய விலை அதிகரிப்புடன் அது 4 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.முதித பெரேரா தெரிவித்தார்.
அதன்படி குறைந்தபட்சம் ஒரு கிலோ அரிசி 2.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.
நெல்லின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாவாகவும், அரிசியின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு 220 ரூபா எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பருவத்தில் நெல் விற்பனை செய்வதில் விவசாயிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு தீர்ந்ததையடுத்து மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)