கார் ஒன்றின் மீது இரும்பு கம்பி விழுந்து விபத்து! மயிரிலையில் தப்பிய சாரதி!
Posted by Yazh NewsAuthor-
இன்று (09) காலை 8.30 மணியளவில் கொழும்பு டவுன்ஹால் வட்டச்சுற்று வழி அருகில் உள்ள Odel காட்சியறைக்கு முன்பாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
அங்கு நின்றிருந்த கார் ஒன்றின் மீது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து இரும்பு குழாய் ஒன்று விழுந்து காரின் கண்ணாடியை துளைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.