
மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு சார்பான உறுதிமொழிகள் இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகின்றார்.
வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடத் தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டு மக்களுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும், பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)