
"ஒவ்வொரு வாகனத்திற்கும் சரிபார்த்த பிறகு ஒரு குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பல வாகனங்கள் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டனர்.
இந்த தனியர் நிறுவன வாகனங்களின் சாரதிகள் தங்களுடைய தனிப்பட்ட வாகனங்களையும் வைத்திருக்கலாம் என்றும், அவர்கள் நிறுவன வாகனம் அல்லது தனியார் வாகனம் ஆகியவற்றில் தங்களுடைய தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்தால், மற்றொன்றைப் பதிவுசெய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் எரிபொருள் பாஸ் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறினார். (யாழ் நியூஸ்)
