
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்நிய செலாவணி கையிருப்பின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க குறைந்தது 4 பில்லியன் டாலர்களையாவது பெற வேண்டும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாட்டில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் அதிகாரிகள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல்களை தொடர நம்புகிறோம் எனவும் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடலின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், பொதுக் கடனின் நிலைத்தன்மையின்மை காரணமாக, இலங்கையின் கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு போதுமான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது விஜயத்தின் இறுதியில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பாக உடன்பாடு ஏற்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை மாதம் தொடங்கும், அதன்படி, ஒரு சிலருக்கு சர்வதேச நாணய நிதியத்தில் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. (யாழ் நியூஸ்)