மேலும் ஒரு உலை எண்ணெய் மற்றும் பெற்றோல் ஏற்றி வந்த கப்பல் ஒன்று நேற்று (21) இலங்கை வந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் கையிருப்புக்கு சொந்தமான எரிபொருள் எண்ணெய் இருப்பு மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விடுவிக்கப்படவுள்ளதுடன், உரிய தரத்தை சரிபார்க்கும் சோதனைகளின் பின்னர் இந்த நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.
மேலும், குறித்த டுவிட்டர் செய்தியின் ஊடாக, இலக்கத் தகடு முறைமை மற்றும் எரிபொருளைப் பெறுவதற்கான கோட்டா முறை இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், தேசிய எரிபொருள் உரிமத்திற்கான QR குறியீடு சரிபார்ப்பு மற்றும் பதிவு இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார். (யாழ் நியூஸ்)