உங்களுக்கான எ‌ரிபொரு‌ள் ஒதுக்கீட்டு நிலுவையை எப்படி அறிந்து கொள்வது?

advertise here on top
Join yazhnews Whatsapp Community

உங்களுக்கான எ‌ரிபொரு‌ள் ஒதுக்கீட்டு நிலுவையை எப்படி அறிந்து கொள்வது?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்துள்ள நபர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டு நிலுவை குறித்து அறிந்து கொள்ள விசேட அமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் வாரத்திற்கு உங்களுக்கு எவ்வளவு எரிபொருளை பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

FUEL BAL என டைப் செய்து இடைவெளி பின்னர் வாகன இலக்கத்தை டைப் செய்து (உதாரணமாக FUEL BAL ABC 1234), 076 6220 000 என்ற தொலைபேசி எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் உங்கள் வாகனத்துக்கான எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும்.

மக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கடந்த 16ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று அதற்கான பதிவை மேற்கொள்ளலாம். 

இதேவேளை, அனுமதிப்பத்திர அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதால், வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.