
காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களை தாக்கிய அரசாங்கத்தை ஆதரிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமரும் அமைச்சரவையும் மக்கள் வாக்குகளை இழந்ததன் காரணமாகவே பதவி விலகியதாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
அதனடிப்படையில், புதிய மக்கள் கருத்துக்கு இடமளித்து நாடாளுமன்றத்தை கலைப்பதே இப்போது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)