கள்ளக் காதலனுடன் பிறந்த சிசுவின் உடலை கணவன் வீட்டுக்கு அனுப்பிய இளம்பெண்! திருகோணமலையில் சம்பவம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

கள்ளக் காதலனுடன் பிறந்த சிசுவின் உடலை கணவன் வீட்டுக்கு அனுப்பிய இளம்பெண்! திருகோணமலையில் சம்பவம்!


திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் தகாத உறவினால் கருவான ஆறு மாத சிசு பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சீனக்குடா வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீட்டிலே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பெண் 20 வயதானவர் என்றும், திருமணம் முடித்த கணவர் வெளிநாடு சென்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் கிண்ணியா குறிச்சாங்கேணி பிரதேசத்தில் தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு, கருவுற்றுள்ளார். கருவை கலைப்பதற்காக பல முயற்சிகள் செய்து வந்த நிலையில், கரு ஆறு மாத காலம் அடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது தாயின் வீட்டில் சடலமாக பிரசவித்துள்ளார்.

பின்னர் குறித்த சிசுவை பழைய துணிகளால் சுற்றி ஒரு பையினுள் வைத்து தனது கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் மூன்று நாட்களின் பின்னர் குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் தாயாரினால் பெண் அனுப்பிவைத்த பையினை சோதனை செய்து பார்த்தபோது துணிகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்து சிசு காணப்பட்டதாகவும் பின்னர் குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிரசவித்த சிசுவின் உடல் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.